உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / இந்தோனேஷியாவை சேர்ந்த இரண்டு பேர் உட்பட 11 பேரிடம் விசாரணை | 80 crore Smuggling products confiscated

இந்தோனேஷியாவை சேர்ந்த இரண்டு பேர் உட்பட 11 பேரிடம் விசாரணை | 80 crore Smuggling products confiscated

தூத்துக்குடி மாலத்தீவு இடையே சிறிய ரக ஏற்றுமதி கப்பலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்திய கடலோர காவல் படை உதவியுடன் மத்திய வருவாய் குற்ற புலனாய்வு அதிகாரிகள் கடலில் ரோந்து சென்றனர். நடுக்கடலில் கட்டுமான பொருட்கள் எடுத்துச் சென்ற கப்பலை சோதனை செய்தனர். அந்தக் கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு தீவிர சோதனை செய்தனர். கப்பலில் செறிவூட்டப்பட்ட ஹசீஸ் எனும் போதைக்காக பயன்படுத்தப்படும் கஞ்சா எண்ணெய்யை கப்பலில் பதுக்கி கடத்தியது உறுதி செய்யப்பட்டது.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ