உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / லீலை ஏட்டையா கதறல்... தீயாக பரவும் ஆடியோ Arumuganeri ps case | Viral Audio | Ins Thileeban case

லீலை ஏட்டையா கதறல்... தீயாக பரவும் ஆடியோ Arumuganeri ps case | Viral Audio | Ins Thileeban case

லீலை ஏட்டையா கதறல்... தீயாக பரவும் ஆடியோ Arumuganeri ps case | Viral Audio | Ins Thileeban case ‛உனக்கு நான் இருக்கேன்... என்று புகார் கொடுக்க வந்த பெண்ணிடமே, வழிந்து வழிந்து சபலத்தை கொட்டிய ஆபாச ஏட்டையாவின் ஆடியோ லீக் ஆனதால், அவரை தூக்கியடித்து இருக்கிறது டிபார்ட்மென்ட். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் அக்னி முத்து. தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறையை சேர்ந்தவர். காயல்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண் குடும்ப பிரச்னை தொடர்பாக புகார் கொடுக்க ஆறுமுகநேரி ஸ்டேஷனுக்கு வந்தார். அந்த புகார் தொடர்பாக ஏட்டு அக்னி முத்து விசாரித்து இருக்கிறார். பிரச்னை என்னவென்று கேட்கும் சாக்கில் பெண்ணின் செல்போன் நம்பருக்கு அடிக்கடி தொடர்பு கொண்டிருக்கிறார். விடிந்ததும் குட் மார்னிங்... இருட்டியதும் குட் நைட் என்று வாட்ஸ்அப்பிலும் மெசேஜ் பறக்க விட்டார். இப்படியே எல்லை மீறிய அக்னி முத்து, ஒரு கட்டத்தில் ‛உனக்கு நான் இருக்கிறேன் என்று துவங்கி சபலத்தை மெசேஜில் கொட்டினார். வீடியோ கால், வாட்ஸ்அப் கால் என்று தொடர்ந்து சீண்டியதால் பெண் அதிர்ச்சியில் உறைந்தார். ஆபாச ஏட்டையாவுக்கு பாடம் புகட்ட பெண் ஆர்வலர் ஒருவரின் உதவியை நாடினார் பாதிக்கப்பட்ட பெண். அவரது செல்போனில் இருந்த எல்லா ஆதாரங்களையும் வாங்கிய ஆர்வலர், ஏட்டு அக்னி முத்துக்கு போன் செய்து லெப்ட் ரைட் வாங்கினார். ‛உனக்கு நான் இருக்கேன் என்று முன்பு சபலம் பொங்கிய அக்னி முத்து, ஆர்வலரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் வெடவெடத்தார். அவர் பம்மி பம்மி பேசும் ஆடியோ வெளியாகி தீயாக பரவியது. breath ஆடியோ கார்டு ஏட்டு அக்னி முத்து பெண் ஆர்வலர் (டைம் நோட்: 1:26 டு 7:09) இந்த ஆடியோ வேகமாக பரவிய நிலையில், ஏட்டு அக்னி முத்துவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் எஸ்பி அபிஷேக் குப்தா. இதே போலீஸ் ஸ்டேஷனில் தான் சில வாரங்கள் முன்பு இன்ஸ்பெக்டர் திலீபன் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக பெண் போலீஸ் ஒருவர் புகார் செய்து அதிர வைத்தார். திலீபனை டிரான்ஸ்பர் செய்ததோடு, சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுத்தது டிபார்ட்மென்ட். அதற்குள் இப்போது அதே ஸ்டேஷனில் ஏட்டு சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை