₹ 60 ஆயிரம், 12 கிராம் தோடு, வெள்ளி கொலுசு திருட்டு | Tuticorin | Burglary at teacher's house
திருச்செந்தூர் மெஞ்ஞானபுரம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரை செல்வின். சென்னையில் மருமகளுக்கு குழந்தை பிறந்ததை பார்க்க மனைவியுடன் கடந்த 17 ம் தேதி சென்றார். வீட்டை பராமரிக்க அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் சாவியை கொடுத்துள்ளார். மாலை வீட்டை சுத்தம் செய்ய வந்த செல்வி கதவுகள் உடைந்து கிடப்பதை கண்டு மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் கூறினார். சென்னையில் இருந்து சித்திரை செல்வின் போலீசாரிடம் பீரோவில் 60 ஆயிரம் ரூபாய், ஒன்றரை பவுன் கம்மல், வெள்ளி கொலுசு இருந்ததை தெரிவித்தார். வீட்டை போலீசார் சோதனையிட்டதில் கொள்ளையன் கடிதம் எழுதியிருந்தான், அதில் என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான் திருடினேன் என உருக்கமாக எழுதியிருந்தான். அவனை போலீசார் தேடுகின்றனர்.