உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / இருவரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய திமுக நிர்வாகி | DMK execitive who stabbed his friend | tuticorin

இருவரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய திமுக நிர்வாகி | DMK execitive who stabbed his friend | tuticorin

இருவரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய திமுக நிர்வாகி / DMK execitive who stabbed his friend / tuticorin துாத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் நேசமணி நகரைச் சேர்ந்தவர் பொன் கற்பகராஜ், வயது 31. ஓட்டப்பிடாரம் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். இவரது நண்பர் ஆத்துார் ராமச்சந்திரபுரம் பாலஜெகதீஷ். இவரிடம் 50,000 ரூபாய் பொன் கற்பகராஜ் கடன் பெற்றார். இதில் 20,000 ரூபாயை திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள, 30,000 ரூபாயை கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் பாலஜெகதீஷும், அவரது நண்பர் ஏசுராஜ் என்பவரும் பொன் கற்பகராஜ் வீட்டிற்கு சென்று கடனை திரும்பக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த பொன் கற்பகராஜ், அரிவாளால் இருவரையும் வெட்டினார். கையில் வெட்டுக்காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முத்தையாபுரம் போலீசார் பொன் கற்பகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ