கடலில் குதித்த 8 மீனவர்கள் கதி? | Tuticorin Fishermen |Fishing Boat Fire |Gas Cylinder Explosion
கடலில் குதித்த 8 மீனவர்கள் கதி? | Tuticorin Fishermen |Fishing Boat Fire |Gas Cylinder Explosion தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சுந்தர். இவருக்கு சொந்தமான விசைப்படகில், எட்டு மீனவர்கள் கடந்த 24ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தருவைகுளத்தில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது படகில் வழக்கம்போல் சமையல் செய்தனர். எதிர்பாராத விதமாக சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த மீன்பிடி வலைகள் முழுவதும் தீப்பற்றி எரிந்ததுடன், விசைப்படகு முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எட்டு மீனவர்களும் உடனடியாக கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது தீ விபத்தில் எழுந்த கரும் புகையைப் பார்த்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற விசைப்படகுகளில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று, கடலில் தத்தளித்த 8 பேரையும் பத்திரமாக மீட்டு தங்களது படகில் ஏற்றினர். உயிர் தப்பிய மீனவர்கள் இன்று மாலை கரை திரும்ப உள்ளனர்.