உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கோயிலில் அமைச்சர் என்பது தெரியாமல் ₹4000 லஞ்சம் கேட்ட அர்ச்சகர்

திருச்செந்துார் கோயிலில் அமைச்சர் என்பது தெரியாமல் ₹4000 லஞ்சம் கேட்ட அர்ச்சகர்

திருச்செந்துார் கோயிலில் அமைச்சர் என்பது தெரியாமல் ₹4000 லஞ்சம் கேட்ட அர்ச்சகர் | Tiruchendur | Tiruchendur Subramaniya Swamy Temple | minister surprise inspection திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் டி சர்ட் அணிந்து ஆய்வு மேற்கொண்டார். கோயிலில் உள்ள முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து முகக்கவசம் அணிந்து பொது தரிசன வரிசையில் அவர் ஆய்வு செய்தபோது, அமைச்சர் என்பது தெரியாமல் அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர், விரைவாக தரிசனம் செய்ய 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அமைச்சர் ஆடிப்போனார். தன்னிடம் பணமில்லை எனக் கூற, ஜிபேயில் அனுப்புங்கள் என அர்ச்சகர் அசால்டாக தெரிவித்துள்ளார். ஆய்வின் போது அமைச்சர் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்களிடம் அமைச்சர் சராமாரி கேள்வி கேட்டதால் அதிர்ச்சியில் அதிகாரிகள் உறைந்தனர். பணியை சரிவர செய்யாத கோயில் பணியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி தர உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கோயில் பணி்யாளர்கள், அர்ச்சகர் ஆகியோர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.

மே 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை