உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / செந்தூர் முருகனிடம் 3 மணி நேரம் மனம் உருகிய ஓபிஎஸ் | ops | trichendur temple | admk case judgement

செந்தூர் முருகனிடம் 3 மணி நேரம் மனம் உருகிய ஓபிஎஸ் | ops | trichendur temple | admk case judgement

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிகாலையில் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார். பின்னர் கோயிலில் நடந்த சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்றார். மனம் உருகி முருகனை வேண்டினார். தொடர்ந்து 3 மணி நேரம் வழிபாடு செய்தார். அதிமுகவின் கட்சி கொடி, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் தான் ஓபிஎஸ் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். இது பற்றி ஓபிஎஸ்சிடம் கேட்டபோது, உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த சிறப்பு வழிபாடு என்று சிரித்தபடி கூறினார்.

மார் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ