விழாக்கோலம் பூண்டது ஸ்ரீவீரபாப்பம்மாள் கோயில் | Temple festival | Tuticorin
விழாக்கோலம் பூண்டது ஸ்ரீவீரபாப்பம்மாள் கோயில் / Temple festival / Tuticorin துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா கோட்டநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவீரபாப்பம்மாள் கோயில் உள்ளது. இக்கோயில் தெலுங்கு விஸ்வகர்ம சனாதன ரிஷி கோத்ரம் கதிரூர்வாளு வம்சாவளி தாயாதிகளுக்கு பாத்தியப்பட்டது. சிவராத்திரியையொட்டி குலதெய்வம் ஸ்ரீவீரபாப்பம்மாள் மற்றும் காவல்தெய்வம் கருப்பணசாமிக்கு தலைமை பூசாரி நாகராஜன் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து வைப்பாற்றில் இருந்து புனித நீர் எடுத்து பெண் பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து வழிபாடு நடத்தினர். பால்குடம் சுமந்து வந்த பெண் பக்தர்கள் அம்மனுக்கு பாலபிேஷகம் செய்து வழிபட்டனர். உலக நன்மை, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தீர்க்க ஆயுள் வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.