உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / கோயிலில் திருப்பணிகள் நடப்பதால் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிக நிறுத்தம்|Tiruchendur

கோயிலில் திருப்பணிகள் நடப்பதால் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிக நிறுத்தம்|Tiruchendur

திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 200 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளை 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்பணிகள் கோயிலில் நடந்து வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவுக்கு முன் கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணிகள் நடக்க உள்ளது. திருவிழா முடிந்த பிறகு கோயிலின் தெற்கு மற்றும் மேற்கு பிரகார தரைத்தள பணிகள் நடக்க உள்ளது. இந்த பணிகள் காரணமாக வரும் 17ம் தேதி முதல் தங்கதேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணிகள் முடிந்த பிறகு தங்கதேர் புறப்பாடு வழக்கம் போல் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை