நடராஜர் அலங்காரத்தில் சிவ அம்சமாக காட்சியளித்த உற்சவர் | Tuticorin | Tiruchendur Subramaniar Temple
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 7 ம் திருவிழாவில் சண்முகர் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். சண்முகர் தூண்டிகை விநாயகர் கோயிலில் நெய், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், விபூதி, பன்னீர், மஞ்சள் என 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. உற்சவர் சண்முகர் மாலை 4:45 மணிக்கு பிள்ளையான் கட்டளை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சிவப்பு நிறப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். பின்புறம் நடராஜர் அலங்காரத்தில் சிவ அம்சமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.