போராடி தோற்றது மும்பை அணி| VOC port Harbour kabadi Tournament| Tuticorin
போராடி தோற்றது மும்பை அணி/ VOC port Harbour kabadi Tournament/ Tuticorin தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கான 40வது கபடி போட்டி நடைபெற்றது. மார்ச் 19ஆம் தேதி தொடங்கிய போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், மும்பை துறைமுகம், சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 47-41 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. வ.உ.சிதம்பரனார் மைதான ஆணையத்தலைவர் சுஷாந்தகுமார் மற்றும் அவரது மனைவி ஷெபாலி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கினர். சென்னை அணியை சேர்ந்த திருக்குமரன் சிறந்த டைரக்டருக்கான விருது வென்றார். மும்பை அணியை சேர்ந்த பிரித்திவிராஜ் ஷிண்டே சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருது பெற்றார். இதில் துறைமுக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ரசித்தனர்.