வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு | CM trophy tournamen
ஜோலார்பேட்டையில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கிரிக்கெட், கபடி, கால்பந்து, செஸ், தடகளம், வாலிபால் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகளில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினர். கடந்த 15 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. வெற்றி பெற்றோருக்கு கலெக்டர் கற்பகராஜ், எம்எல்ஏக்கள் தேவராஜ் , நல்லதம்பி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
செப் 30, 2024