உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பத்தூர் / திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்!போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்

திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்!போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்

திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்!போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம் Vaniyambadi Crime, Tirupattur Crime News திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், பெத்தூர் பகுதியில் முன்னாள் விஏஓ பிரகாசம் என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி, பிரகாசம் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கிவிட்டு, கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் இரண்டு சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மின்மோட்டாரை நிறுத்திவிட்டு ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் அழுகிய நிலையில் இருந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் இறந்து கிடந்த சிறுவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து, வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இறந்த சிறுவர்கள் ஜமுனாமத்தூர், வெளிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு - சிவகாமி தம்பதியினரின் 5 வயது மகன் பிரதாப் மற்றும் 2 வயது மகன் பிரேம்குமார் என்பது தெரியவந்தது. தனது மகன்கள் 6 நாட்களாகக் காணாமல் போயிருந்தும், தாய் சிவகாமி இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில், சிவகாமி தனது கணவர் சேட்டுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு வருட காலமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே, தனிமையில் இருந்த சிவகாமி தனது இரண்டு குழந்தைகளின் நலனையும் கண்டுகொள்ளாமல், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவுடன் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்த உறவில் சிவகாமி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில், ராஜா, “நமக்குத்தான் குழந்தை பிறக்கப் போகிறது. ஏற்கனவே உள்ள இரண்டு மகன்கள் எதற்கு? அவர்கள் நமக்கு வேண்டாம், கொலை செய்து விடலாம்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு, தாய் சிவகாமி தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய ராஜாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இருவரும் சேர்ந்து சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஆலங்காயம் பகுதிக்கு அழைத்து வந்து, மறைவாக உள்ள விவசாயக் கிணற்றில் அடுத்தடுத்து தள்ளிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, கள்ளகாதலன் ராஜாவையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வாணியம்பாடி அருகே ராஜாவுடன் சேர்ந்து பெற்ற தாய் தனது இரண்டு மகன்களையும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

செப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !