டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் | Govt Bus | +2 Girl student | Driver suspended | Tirupathur
நிற்காமல் சென்ற அரசு பஸ் துரத்திய பிளஸ் 2 மாணவி Dis..: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் | Govt Bus | +2 Girl student | Driver suspended | Tirupathur | திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வரை அரசு டவுன் பஸ் இயங்குகிறது. இதில் பள்ளி மாணவர்கள், பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இன்று காலை ஆலங்காயம் செல்லும் வழியில் கொத்தக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் மாணவி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அந்த வழியாக வந்த டவுன் பஸ், நிற்காமல் சென்றது. இதனால் பஸ்சில் ஏற சென்ற மாணவி அதிர்ச்சி அடைந்தார். பஸ்சை தவற விட்டால் பிளஸ் 2 தேர்வுக்கு நேரமாகி விடும் என்பதால் அந்த மாணவி பஸ்சை துரத்தி சென்று ஏற முயன்றார். மாணவி ஓடி வருவதை கூட டிரைவர் கவனிக்கவில்லை. 200 மீட்டர் தூரம் பஸ் வேகத்துக்கு ஈடு கொடுத்து மாணவி ஓடும் காட்சிகள் நெஞ்சை பதற வைத்தது. கடைசியில் மாணவி ஓட முடியாமல் நிற்கும் நேரத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தி மாணவியை ஏற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக பஸ் டிரைவர்