மறியலைக் கைவிட மறுத்து போராட்டம் | Condemning the police | Picketing with family
திருப்பத்துார் மாவட்டம்,வக்கனம்பட்டி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் குகன் (25). இவர் நள்ளிரவில் ஜோலார்பேட்டையில் டீ குடிக்கச் சென்றுள்ளார். அங்கு வந்த போலீசார், குகனின் பைக் சாவியை வாங்கிக் கொண்டு, காலையில் ஸ்டேஷனில் வந்து பைக்கை வாங்கிக் கொள்ள கூறியுள்ளனர். இதைக் கேட்ட குகன், நான் குடிக்கவில்லை. வாகனத்தை வேகமாகவும் ஓட்டவில்லை என கேட்டுள்ளார். போலீசார், குகனை தள்ளி விட்டு, பைக்கை எடுத்துச் சென்றனர். இதனை கண்டித்து இன்று வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் குகனின் குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குகனின் குடும்பத்தார், மறியலைக் கைவிட மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.