2 வீடுகளில் 15 பவுன் நகை, 5 லட்சம் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் சின்னபள்ளிகுப்பம் எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் ஏஎஸ்பி வெங்கடேசன். கடந்த 7 ம் தேதி வெளியூர் சென்றிருந்த போது மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 2 லட்சம் ரூபாயை திருடி சென்றனர். அன்றே கட்டவாரப்பள்ளியில் சண்முகம் என்பவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் மிளகாய் பொடியை தூவி 5 பவுன், 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். திருப்பத்தூர் எஸ்பி ஷ்ரேயாகுப்தா தலைமையில் தனிப்படை அமைத்து ஏஎஸ்பி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இவ்வழக்கில் சின்னபள்ளிகுப்பத்தை சேர்ந்த சங்கரை பிடிபட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த சாந்தி, ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், பிரபாகரன் ஆகியோருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதில் கொள்ளை நடத்தப்பட இருக்கும் வீட்டை நோட்டமிட்டு சொல்லும் சாந்தி, ஹிரி கிருஷ்ணன், முத்துக்குமார், பிரபாகரன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடக்கிறது.