/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ விண்ணைப்பிளந்த பக்தர்களின் கோவிந்தா கோஷம் Tirupur Veeraragava Perumal Temple
விண்ணைப்பிளந்த பக்தர்களின் கோவிந்தா கோஷம் Tirupur Veeraragava Perumal Temple
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிப்பட்ட தேரில் பூமிநீளாதேவி, கனகவல்லி தாயாருடன் அருள்மிகு வீரராக பெருமாள் எழுந்தருளினார். முத்தங்கிராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் பக்தர்கள் கும்மியாட்டம், கோலாட்டத்துடன் ஈஸ்வரன் கோயில் வீதி, கே.எஸ்.சி பள்ளி வீதி, காமராஜர் வீதி வழியாக தேர் சுற்றி வந்து நிலை நிறுத்தப்பட்டது.
மே 25, 2024