நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | Athletics | Champions | Tournament
நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | Athletics | Champions | Tournament திருப்பூரில் இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டி நடக்கிறது திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஸ்ட்ரீட் கிரிக்கெட், வாலிபால், கபாடி, எறிபந்து, கயிறு இழுத்தல், தடகளம், கேரம், குண்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அளவில் நடக்கிறது. 27ம் தேதி வரை போட்டி நடைபெறும். ஆன்லைன் மூலம் பதிவு செய்த நூற்றுக்கணக்கானோர் போட்டியில் கலந்து கொண்டனர். ஒன்றிய அளவிலான வெற்றி பெறுபவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் . போட்டி தொடர்ந்து நடக்கிறது.