பேங்க் அக்கவுண்டைஹேக் செய்த கும்பலுக்கு வலை வீச்சு| bank account hacked using WhatsApp link| Tirupur
திருப்பூர் ராயர் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த எட்டாம் தேதி தனியார் பேங்க் லோகோவுடன் வாட்ஸ் அப்பில் வாடிக்கையாளர் கூறும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறியும் கேஒய்சி அப்டேட் செய்யுமாறு தங்கராஜிற்கு மெசேஜ் வந்துள்ளது. பிறகு கடந்த சனிக்கிழமை அன்று கேஒய்சி அப்டேட் செய்ய கடைசி நாள் என்றும் செய்யாவிட்டால் பேங்க் அக்கவுண்ட் முடக்கப்படும் என்றும் மெசேஜ் வந்தது. மெசேஜில் இருந்த லிங்கில் தங்கராஜ் கேஒய்சி அப்டேட் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய அக்கவுண்டில் இருந்து ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் 6 வேவ்வேறு அக்கவுண்டுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்தது. அதிர்ச்சியடைந்த தங்கராஜ் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டார். அவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு இருப்பதால் அக்கவுண்ட்டை பிளாக் செய்ய கோரிக்கை விடுத்தார். திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.