/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ தடையை மீறியபாஜவினரை கயிறு கட்டி தடுத்த போலீசார்| Krishnagiri | BJP Independence DayTwo WheelerRally
தடையை மீறியபாஜவினரை கயிறு கட்டி தடுத்த போலீசார்| Krishnagiri | BJP Independence DayTwo WheelerRally
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜ சார்பில் சுதந்திர தின டூவீலர் பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி மறுத்தனர். மேற்கு மாவட்ட பாஜ அலுவலகத்தில் பாஜவினர் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றனர். போலீசார் கயிறுகளை கட்டி வாகனங்களை தடுத்து நிறுத்தினர். கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சங்கர் மற்றும் ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜவினர் 4 கார்களில் தொரப்பள்ளிக்கு தேசிய கொடிகளுடன் பேரணியாக சென்று ராஜாஜி இல்லத்தில் சிலைக்கு மாலை அணிவித்து, கிராமத்தில் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
ஆக 13, 2024