உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / வெற்றி பெற்ற வீரர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி| Body Building| sports| District Tournament| Tirupur

வெற்றி பெற்ற வீரர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி| Body Building| sports| District Tournament| Tirupur

வெற்றி பெற்ற வீரர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி| Body Building| sports| District Tournament| Tirupur திருப்பூர் இடுவோம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பூர் அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் போட்டி நடத்தப்பட்டது. 45-55, 55-65, 65-75 வயது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . கட்டழகன்கள் தங்களது உடல் கட்டுமான திறமைகளை வெளிப்படுத்தினர். திரளான பார்வையாளர்கள் போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். போட்டியின் நிறைவு விழாவில் பல்லடம் அதிமுக MLA ஆனந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு 3000, இரண்டாவது பரிசு 2000 மற்றும் மூன்றாம் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை