/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ தீ விபத்துக்கு காரணம் தெரியாமல் திணறல் | Bus fire accident | Tripur
தீ விபத்துக்கு காரணம் தெரியாமல் திணறல் | Bus fire accident | Tripur
திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 52 பயணிகளுடன் திருச்செந்தூர் நோக்கி அரசு பஸ் சென்றது. தாராபுரம் - அலங்கியம் பைபாஸ் அருகே சென்ற போது திடீரென பஸ்சில் கரும்புகை வெளியேறியது. இதையறிந்த டிரைவர் உடனே பஸ்சை ரோட்டோரம் நிறுத்தி பயணிகளை வேகமாக கீழே இறக்கி விட்டார். அடுத்த சில நிமிடங்களில் பஸ் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
செப் 27, 2024