உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் ஆதிக்கம் | Cricket Match

திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் ஆதிக்கம் | Cricket Match

திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஆண்டு டி.எஸ்.சி. (tcs) சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 13 ம் தேதி துவங்கியது. தினமும் இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அணிகள் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று வருகிறது. முருகம்பாளையம் வயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற எல்.ஜி.ஸ்ஹப் ஆஃப் கிரிக்கெட் அணி 30 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 121 ரன் எடுத்தது. அணியின் பேட்ஸ்மேன்கள் நிஷாந்த் 34 ரன் கிஷாந்த், 32 ரன் எடுத்தனர். எளிய இலக்கை விரட்டிய கேரளா திருபுனித்ரா அணி 23 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பேட்ஸ்மேன் அமேமனோஜ் 52 ரன் எடுத்து அரைசதம் கடந்தார். ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார். இவரே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு போட்டியில் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணி 30 ஓவர் நிறைவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது. அணியின் பேட்ஸ்மேன் ராகவ் 70 ரன் எடுத்தார். இலக்கை விரட்டிய டான்பாஸ்கோ அணி 30 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 84 ரன் மட்டுமே எடுத்தது. 137 ரன் வித்தியாசத்தில், டான்பாஸ்கோ அணி வெற்றி பெற்றது. திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் ராகவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜன 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை