ஹைதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி அசத்தல் |Cricket Match
திருப்பூர் அடுத்த முருகம்பாளையம் ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பாக டி.எஸ்.சி. (TSC) சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 13ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் ஏ மற்றும் பி பிரிவில் தலா நான்கு அணிகள் வீதம், எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் முதல் போட்டியில் டாஸ் வென்ற கிரிக்கெட் நெக்ஸ்ட் அகாடமி அணி, பேட்டிங் செய்து, 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன் எடுத்தது. பேட்ஸ்மேன் பக்ரிதன் 32 ரன் எடுத்தார்.
ஜன 18, 2024