உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / 20 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Nift-tea Cricket league| Cricket tournament|Tirupur

20 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Nift-tea Cricket league| Cricket tournament|Tirupur

20 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Nift-tea Cricket league| Cricket tournament|Tirupur திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவங்கியது. தினமலர் நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட்ஸ் இணைந்து நிப்ட்-டீ பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துகின்றனர். போட்டியில், திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த 20 பின்னலாடை உற்பத்தி நிறுவன கிரிக்கெட் அணிகள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். 15 ஓவரில் போட்டி லீக் முறையில் நடத்தப்படுகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் விக்டஸ் டையிங் அணியும் ஸ்ரீசிவஜோதி ஸ்பின்னிங் மில் அணியும் மோதினர். டாஸ் வென்ற விக்டஸ் டையிங் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 15 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்து அபாரமாக விளையாடியது. அதைத்தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரீ சிவஜோதி ஸ்பின்னிங் மில் அணியினர் 15 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 130 ரன்கள் வித்தியாசத்தில் விக்டஸ் டையிங் அணி அபார வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை