உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / 2200 குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு | District athletic tournament| covai

2200 குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு | District athletic tournament| covai

2200 குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு | District athletic tournament| covai திருப்பூர், ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடத்தப்படும். இன்று நான்காவது ஆண்டு மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள், ராக்கியாபாளையம், ஐ வின் ட்ராக் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் 2200 பேர் பங்கேற்றனர். 50, 75, 100, 200, 400, 600 மீட்டர் ஓட்டம், கலப்பு தொடர் ஓட்டம், பந்து எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கிட்ஸ் ஜாவலின் எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது . எல்.கே.ஜி - யூ.கே.ஜி பிரிவு , அண்டர் 8 , 10 , 12, 14 என்ற பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பவானி அழகேசன் தலைமை வகித்தார். போட்டிகளை பாலபவன் குளோபல் பள்ளியின் தாளாளர் மாலதி முத்துரத்தினம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் யங் இந்தியன் அமைப்பின் முன்னாள் தலைவர் நிரஞ்சன், வாஸ்து நிபுணர் மோகனகிருஷ்ணா, கொங்குநாடு விளையாட்டு அறக்கட்டளை தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர் . போட்டியில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மெடல், சான்றிதழ் மற்றும் சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

அக் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி