பல்வேறு பிரிவுகளில் அபாரமாக விளையாடும் மாணவிகள்| District Boxing Tournament| Tirupur
பல்வேறு பிரிவுகளில் அபாரமாக விளையாடும் மாணவிகள்| District Boxing Tournament| Tirupur திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. குறுமைய அளவில் நடந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற, 151 பேர் மாவட்ட போட்டியில் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளை விவேகானந்தா பள்ளி முதல்வர் சின்னையா துவக்கி வைத்தார். கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முருகன் வரவேற்றார். மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் இளங்கோ, ராஜேந்திரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இன்று மாணவியர் பிரிவு குத்துச்சண்டை போட்டி நடக்கிறது. விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.