உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி| District kabbadi tournament| Tirupur

வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி| District kabbadi tournament| Tirupur

வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி| District kabbadi tournament| Tirupur திருப்பூர் அலகுமலை வித்யாலயா பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று மாவட்ட மாணவர் கபடி போட்டி நடந்தது. பள்ளி செயலாளர் அண்ணாதுரை போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாவட்ட கண்காணிப்பு குழு ராஜேந்திரன், முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் மாவட்டத்தின் ஏழு குறுமைய அளவில் முதலிடம் பெற்ற அணிகள் பங்கேற்றன. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில், கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மூலனுார் பாரதி வித்யாலயா அணிகள் மோதின. இதில் 46 - 39 என்ற புள்ளிக் கணக்கில், கே.எஸ்.சி., பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, கே.எஸ்.சி., பள்ளி அணியை, 28 - 25 என்ற புள்ளி கணக்கில் வென்றது. பத்தொன்பது வயதிற்குட்பட்டோர் பிரிவில், வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் 31 - 28 என்ற புள்ளிக்கணக்கில், பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றனர். பல்வேறு பிரிவுகளில் முதலிடம் வென்ற வீரர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

நவ 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி