உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / 6 லட்சம் ஓட்டு திமுகவுக்கு விழாது என எச்சரிக்கை | DMK Office seige

6 லட்சம் ஓட்டு திமுகவுக்கு விழாது என எச்சரிக்கை | DMK Office seige

தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஆயிரக்கணக்கானோர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். இதற்கிடையே அரசாணை எண் 149ன் படி மறு நியமனத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த அரசாணையை திரும்ப பெறக்கோரி பல கட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலின் போது தி.மு.க. இந்த ஆணை ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆட்சி அமைந்து 3 ஆண்டாகியும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஆசிரியர் தேர்வுக்கான நடவடிக்கையும் துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அதிரடியாக களம் இறங்கினர். திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் நெசவாளர் காலனியில் உள்ள தி.மு.க. கூட்டணி தேர்தல் பணிமனையை முற்றுகையிட்டனர். அங்கு வேட்பாளர் இல்லாத நிலையில் அலுவலக பொறுப்பாளரிடம் மனு அளித்தனர். அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் அவர்களைத் தடுத்தனர். கோரிக்கை குறித்து கலெக்டரிடம் தெரிவியுங்கள்; பிரசாரத்துக்கு வரும் போது வேட்பாளரிடம் தெரிவியுங்கள் என்று கூறி அனுப்பினர்.

ஏப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ