சிலம்பம் சுற்றுதலை செய்து காட்டி அசத்திய மாணவர்கள்
சிலம்பம் சுற்றுதலை செய்து காட்டி அசத்திய மாணவர்கள் /Tiruppur /Explanation of Silambam practice for physical education teachers திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிலம்பம் விளையாட்டின் பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் முதலிபாளையம், நிப்ட் டீ கல்லூரியில் நடைபெற்றது. நிப்ட் டீ கல்லூரியின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக்குழு அலுவலர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் வரவேற்றார். குறுமைய இணைச் செயலாளர் தமிழ்வாணி, கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் லதா மாதேஸ்வரி, முருகன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். சிலம்பப்பயிற்சி ஆசிரியர்கள் கிருஷ்ணன், சந்தீப்குமார், சிவகாமிப்பிரியா ஆகியோர் சிலம்பாட்டத்தின் வணக்க முறை, தொழில் வரிசை, செயல்திறன், மதிப்பெண் அளித்தல் பற்றி விளக்கம் அளித்தனர். சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம் சுற்றுதல் மற்றும் தொட்டு புள்ளிகள் பெறுதலை செய்து காண்பித்தனர். திருப்பூர் தெற்கு குறுமையத்திற்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.