சிலை தயாரிப்பு பணி தீவிரம்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படும். விழா நிறைவில் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட திருப்பூரில் இரு இடங்களில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் முழுவதும் 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 9 நாட்கள் விழா கொண்டாடப்பட உள்ளது.
ஆக 06, 2024