20 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலை 1.50 லட்சம் சுவாமி சிலைகள் ரெடி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டு தோறும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு செப்டம்பர் 14 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. அன்றைய தினம் ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விஜர்சனம் செய்ய உள்ளனர். ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் அலகுமலை, கொடுவாய் அருகே வஞ்சிபாளையம் என, இரு இடங்களில் முழு வீச்சில் நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை செப்டம்பர் முதல் வாரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இம்முறை சிவ ரூப விநாயகர், தர்பார் விநாயகர், சிம்ம வாகனம், கமலம் விநாயகர், அன்னவாகனம் விநாயகர், ஆதியோகி விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல், 10 அடி வரையில் விநாயகர் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 20 லட்சம் வீடுகளில் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 600 இடங்களில் விஜர்சன ஊர்வலம் நடக்க உள்ளது. திருப்பூர் மாநகரில் 1,008 மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14 ம் தேதி ஆரம்பித்து ஒரு வாரம் கொண்டாப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜர்சன ஊர்வலம் செப்டம்பர் 17 ம் தேதி திருப்பூரில், செப்டம்பர் 18 ம் தேதி கோவையில், செப்டம்பர் 20 ம் தேதி சென்னை உள்ளிட்ட இடங்களில் கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது.