நேஷனல் மாடல் பள்ளியில் நவீன விளையாட்டு மைதானம் திறப்பு
நேஷனல் மாடல் பள்ளியில் நவீன விளையாட்டு மைதானம் திறப்பு | Sports Ground Inauguration Ceremony | National Model Senior Secondary School | Udumalaipettai | Tiruppur திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் 4.5 ஏக்கர் பரப்பில் புதிய நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேஷனல் மாடல் பள்ளிக் குழுமம் பள்ளித் தாளாளர் டாக்டர்.மோகன் சந்தர் தலைமையில் நடைபெற்றது. பள்ளிச் செயலாளர் உமா மோகன் சந்தர், இயக்குனர், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை சுங்க வரி ஆய்வாளர் முஹமது ஷலாலுதீன், இந்தியாவிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஊதா நிற ஓட்டப் பந்தய நவீன ஓடுதளத்தைத் ( purple athletic track) திறந்து வைத்தார். ஓடுகளத்தின் தொடக்க ஓட்டமாக நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் பல்வேறு கிளையான கருமத்தம்பட்டி, பீளமேடு, உடுமலை மாணவர்கள் தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் முதல்வர்கள் கைப்பந்து, எறிபந்து, கால்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து முதலிய விளையாட்டு மைதானங்களை திறந்து வைத்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய, விளையாட்டு மைதானத்தில் நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் விளையாடி மகிழ்ந்தனர்.