மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு | Homam
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. மாணவ மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டி பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோயிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது. இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டிக் கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு பென்சில், பேனா வழங்கப்பட்டது.
ஜன 28, 2024