உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / புரோக்கர் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகும் வட மாநில தொழிலாளர்கள்

புரோக்கர் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகும் வட மாநில தொழிலாளர்கள்

புரோக்கர் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகும் வட மாநில தொழிலாளர்கள் | Job brokers| cotton export| migrant workers| Tirupur திருப்பூரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகமும் 30,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது. திருப்பூரில் பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் என போலி அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு பெற்று பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தோர் திருப்பூரில் சட்டவிரோதமாக ஊடுருவி வருகின்றனர். குறைந்த சம்பளத்திற்கு மொழி தெரியாத வேற்று மாநில தொழிலாளர்களை பல ஏஜென்ட்கள் திருப்பூர் கம்பெனிகளில் சேர்த்து விடுகின்றனர். Byt ராமகிருஷ்ணன் சமூக ஆர்வலர் 00:03-01:37 திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வேலை தேடி வந்து இறங்கும் வடமாநில மக்களை ஏஜெண்டுகள் குறிவைக்கின்றனர். நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பின்னலாடை தொழிற்சாலையில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதியை இடைத்தரகர்கள் கமிஷனாக பறிக்கின்றனர். Byt பர்வத் சிங் வடமாநில தொழிலாளர் 00:03-00:24 மேலும் புலம்பெயர் தொழிலாளிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சில தினங்களுக்கு முன் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு வந்த கணவன் மனைவியை வேலை வாங்கி தருவதாக கூறி பீகாரை சேர்ந்த 3 ஏஜென்டுகள் அழைத்துச் சென்றனர். கணவனை தாக்கிவிட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறைந்த சம்பளத்திற்கு ஆள் பிடித்து கொடுப்பதற்காக சில கம்பெனிகள் வடமாநில இடைத்தரகர்களை பணம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளதும் அம்பலமாகி உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். Byt அல்லோசியஸ் இயக்குனர், சேவ் தன்னார்வ தொண்டு நிறுவனம் 00:19-02:20

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை