/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ மணி பப்ளிக் பள்ளி அணியினர் சாம்பியன் | Tirupur | Men's Co Sports competition
மணி பப்ளிக் பள்ளி அணியினர் சாம்பியன் | Tirupur | Men's Co Sports competition
திருப்பூர் தெற்கு குறு மைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆண்கள் பிரிவு கோ-கோ இறுதி போட்டி முதலிபாளையம் நிப்டீ கல்லூரியில் நடந்தது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கே.எஸ்.சி, அரசு பள்ளியும், மணி பப்ளிக் பள்ளி அணியும் மோதின. கே.எஸ்.சி பள்ளி முதல் சுற்றில் 7 புள்ளிகளும், இரண்டாவது சுற்றில் 4 புள்ளிகள் என மொத்தம் 11 புள்ளிகள் எடுத்தது. மணி பப்ளிக் பள்ளி முதல் சுற்றில் 9 புள்ளிகளும், இரண்டாவது சுற்றில் 11 புள்ளிகள் என மொத்தம் 20 புள்ளிகள் எடுத்தது. மணி பப்ளிக் பள்ளி 20:11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வென்றது. போட்டி ஏற்பாடுகளை அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்
ஆக 30, 2024