இரண்டாம் இடம் பிடித்த எஸ். பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி | Tiruppur | Mini-Sports Competition
இரண்டாம் இடம் பிடித்த எஸ். பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி / Tiruppur / Mini-Sports Competition திருப்பூர் தெற்கு குறுமைய சார்பில் மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் போட்டியை துவக்கி வைத்தார். 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் செயின் ஜோசப் பள்ளிமுதலிடமும், இரண்டாமிடம் முருகப்பா செட்டியார் பள்ளியும் பெற்றன. 17 வயதிற்குட்பட்ட பிரிவில் செயின் ஜோசப் பள்ளிமுதலிடமும், இரண்டாமிடம் பிரண்ட் லைன் பள்ளி பெற்றன. 19 வயதிற்குட்பட்ட பிரிவில் அலகுமலை வித்யாலயா பள்ளிமுதலிடமும், இரண்டாமிடம் எஸ். பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றனர். போட்டியின் நடுவர்களாக ஆனந்தன், முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.