உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / அம்மனுக்கு பல்வேறு தானியங்கள் சீர்வரிசை கொண்டு வந்த பக்தர்கள் | Tirupur | Magaliyamman temple

அம்மனுக்கு பல்வேறு தானியங்கள் சீர்வரிசை கொண்டு வந்த பக்தர்கள் | Tirupur | Magaliyamman temple

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணப்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வரலட்சுமி விரத பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. புடவை, வளையல், பூ, பழம், மஞ்சள் குங்குமம், தானியங்கள் சீர்வரிசையாக பெண்கள் எடுத்து வந்து நாட்டாங்கலாலுக்கு முன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேள தாளங்கள் முழங்க சீர்வரிசைகள் ஊர்வலமாக எடுத்து வந்து மாகாளியம்மனுக்கு படையல் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !