/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ பிஷப் பள்ளி அணியும், ஜெய் சாரதா பள்ளி அணிகள் வெற்றி | Tirupur | Football match
பிஷப் பள்ளி அணியும், ஜெய் சாரதா பள்ளி அணிகள் வெற்றி | Tirupur | Football match
திருப்பூர் வடக்கு குறுமைய போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டி கனியாம் பூண்டி மைக்ரோ கிட்ஸ் பள்ளியில் நடந்தது. போட்டியை பள்ளி முதல்வர் தங்கம் துவக்கி வைத்தார். முதல் போட்டியில் பிஷப் பள்ளியும், வெற்றி வித்யாலயா பள்ளி அணியும் மோதின. பிஷப் பள்ளி அணி 5:0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2 வது போட்டியில் ஜெய் சாரதா பள்ளியும் அனுப்பர்பாளையம் அரசு பள்ளி அணியும் மோதின. ஜெய் சாரதா பள்ளி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வடக்கு குறுமைய கபாடி போட்டி திருப்பூர் ஜெய் சாரதா பள்ளியில் நடந்தது. செயின் ஜோசப் மற்றும் பிஷப் பள்ளி அணிகள் மோதியது. பிஷப் பள்ளி அணி 30:19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
ஆக 16, 2024