பரபரப்பாக ஆடிய வீரர்கள் | Sports | Covai
திருப்பூர் தெற்கு குறு மைய டென்னிஸ் போட்டி ஓம் ஸ்ரீ டென்னிஸ் அகாடமியில் நடந்தது. அதில் 14 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் கிட்ஸ் கிளப் மற்றும் பிரண்ட் லைன் பள்ளிகள் மோதியது. அதில் பிரண்ட் லைன் பள்ளி 3:1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. செஞ்சுரி மற்றும் பிளாட்டோஸ் பள்ளி அணிகள் மோதிய போட்டியில் பிளாட்டோஸ் 3:0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரட்டையர் பிரிவில் கிட்ஸ் கிளப் மற்றும் பிரண்ட லைன் பள்ளிகள் மோதியது. அதில் கிட்ஸ் கிளப் பள்ளி 3:0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. செஞ்சுரி மற்றும் பிளாட்டோஸ் பள்ளி அணிகள் மோதிய போட்டியில் பிளாட்டோஸ் 3:0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ஆக 31, 2024