ஆர்வத்துடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளி வீரர்கள் | sports | Tripur
திருப்பூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராம் வசந்தகுமார் துவக்கி வைத்தார். தடகள பயிற்சியாளர் திலகவதி, உடற்கல்வி ஆசிரியர் ராஜன் ஒருங்கிணைத்தார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 113 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். காதுகேளாதோர், கண் பார்வை குறைபாடு உடையோர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. தங்கள் உடல், மனக்குறைகளை மறந்து, ஆர்வமுடன் மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் திறமை காட்டியது, பார்வையாளர்களின் கைதட்டல்களை பெற்றனர்.
செப் 13, 2024