தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகம் ஏற்பாடு | Sports | covai
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகம் சார்பாக ஜூனியர் மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டி காட்பாடியில் வரும் 22 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் திருப்பூர் மாவட்ட கபடிக் கழகம் சார்பாக மாவட்ட ஜூனியர் பிரிவு கபடி அணி தேர்வு போட்டி காங்கயம் ரோடு காயத்திரி மஹாலில் நடந்தது. போட்டிகளை கபடிக் கழகத் தலைவர் கொங்கு முருகேசன் மற்றும் செயலாளர் ஜெயச்சித்ரா சண்முகம் துவக்கி வைத்தனர். இதில் 141 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் தேர்வுக் குழுவினர் மூலம் 20 வயதிற்கு உட்பட்ட 70 கிலோ எடை பிரிவில் சிறப்பாக விளையாடும் 12 வீரர்களில் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மாநில சேம்பியன்ஷிப் கபடி போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
நவ 16, 2024