/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ பணியாளர்கள் பயன்பெற விழுதுகள் வேர்கள் திட்டம்: அமைச்சர் பெரியகருப்பன்
பணியாளர்கள் பயன்பெற விழுதுகள் வேர்கள் திட்டம்: அமைச்சர் பெரியகருப்பன்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 450 பேருக்கு ரூ.2.23 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டது. உடுமலை கூட்டுறவு பண்டகசாலை சார்பில் ரூ.3.79 கோடி செலவில் கட்டப்பட்ட வணிக வளாகம், மாநில கூட்டுறவு இணையம் சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் பெட்ரோல் பங்க் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். விழாவில் அமைச்சர் சாமிநாதன், எம்.பி ஈஸ்வரசாமி, கலெக்டர் கிறிஸ்துராஜ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவ 24, 2024