நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி Title : ஈஸ்ட் மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி அதிரடி
ஈஸ்ட் மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி அதிரடி| NIFT Tea cricket tournament| Tirupur அப்துல் கலாம் நினைவு சுழற்கோப்பைக்கான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. தினமலர் நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட்ஸ் இணைந்து போட்டிகளை நடத்துகின்றனர் . திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 21 பின்னலாடை உற்பத்தி நிறுவன கிரிக்கெட் அணிகள் களத்தில் உள்ளன. 15 ஓவர்களுடன் லீக் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணியும், தினேஷ் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் அணியும் மோதினர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட்மேன் அணி, 15 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விஜய் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய தினேஷ் டெக்ஸ்டைல் மில்ஸ் அணி 15 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து ஈஸ்ட்மேன் அணி அபார வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்