உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / விக்டஸ் டையிங் அணி அபார வெற்றி| Nift tea premier league Cricket tournament| Tirupur

விக்டஸ் டையிங் அணி அபார வெற்றி| Nift tea premier league Cricket tournament| Tirupur

விக்டஸ் டையிங் அணி அபார வெற்றி| Nift tea premier league Cricket tournament| Tirupur அப்துல் கலாம் சுற்கோப்பைக்கான நிஃப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. தினமலர் நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட்ஸ் இணைந்து போட்டிகளை நடத்துகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த பின்னலாடை உற்பத்தி நிறுவன கிரிக்கெட் அணிகள் போட்டியில் களமிறங்கின. 20 ஓவர்களுடன் மூன்றாவது காலிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் விக்டஸ் டையிங்ஸ் மற்றும் ராம்ராஜ் காட்டன் அணிகள் மோதின. டாஸ் வென்ற விக்டஸ் டையிங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 131ரன்கள் எடுத்தது. அந்த அணியில் வீரர் சசி 42 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக பேட்டிங் செய்த ராம்ராஜ் காட்டன் அணி 15.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து விக்டஸ் டையிங் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை