டூவீலரை மீட்ட நிலையில் உடலை தேடும் பணி தீவிரம் | Tirupur | Retired Army Officer Body search mission
திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் பென்னி, வயது 67. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியாளராக பணிபுரிந்தார். திருப்பூரில் இருந்து தினமும் ரயிலில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். வீட்டில் இருந்து பைக்கில் ரயில்வே ஸ்டேஷன் செல்வார். கடந்த 1ம் தேதி பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வடக்கு போலீஸ் ஸ்டேசனில் புகார் கூறினர். ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக செல்லும் ரோட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை போலீசார் கண்காணித்தனர். ரயில் நிலையத்திலிருந்து சூசையபுரம் செல்லும் சுரங்க பாலம் வழியே கடந்த 1ம் தேதி இரவு திரும்பியது வரை சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. அங்குள்ள அகன்ற சாக்கடை கால்வாயில் ராஜன் பென்னி தவறி விழுந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். சாக்கடை கால்வாயில் அவரது டூவீலர் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று கன மழை கொட்டியது. கால்வாயில் தண்ணீர் அதிகம் சென்றதால் ராஜன் பென்னி உடல் வேறு பகுதிக்கு அடித்துச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து உடலை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.