உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / அரசு ஆஸ்பிடலில் அடிவயிறு ஸ்கேன் செய்த செல்வப்பெருந்தகை | GH inspection | Selvaperunthagai mla

அரசு ஆஸ்பிடலில் அடிவயிறு ஸ்கேன் செய்த செல்வப்பெருந்தகை | GH inspection | Selvaperunthagai mla

அரசு ஆஸ்பிடலில் அடிவயிறு ஸ்கேன் செய்த செல்வப்பெருந்தகை| GH inspection | Selvaperunthagai mla | Tripur திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை செல்வப்பெருந்தகை தலைமையிலான சட்டசபை பொதுக்கணக்குக்குழு ஆய்வு செய்தது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.சி.டி. ஸ்கேன் சென்டரில் ஆய்வு நடந்தது. நாளொன்று எவ்வளவு பேர் ஸ்கேன் எடுக்க வருகின்றனர், நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மெஷின்கள் வாங்கியதில் எவ்வளவு செலவாகியது உள்ளிட்ட விபரங்களை கேட்டனர். அதற்கு டீன் முருகேசன் பதிலளித்தார். ஆய்வை முடித்து காரில் ஏற வந்த செல்வப்பெருந்தகை டீன் முருகேசனை அழைத்து தனக்கு அடிவயிறு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார். உடனே அவரை டீன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறைக்கு அழைத்து சென்றார். செல்வதற்கு முன் ஒரு லிட்டர் தண்ணீரை செல்வப்பெருந்தகை குடித்தார். அவருடன் அவரது உதவியாளர் மட்டும் சென்றார். ஸ்கேன் எடுத்து முடித்த பின் செல்வப்பெருந்தகை சிரித்த முகத்துடன் அறையை விட்டு வெளியே வந்தார். அவரது அடிவயிற்றில் நோ ப்ராளம் என்பதை அவரது சிரிப்பு வெளிச்சம் போட்டு காட்டியது.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ