தார் பாய் தொங்க விட்டு வகுப்பறை அமைப்பு|Shift to use the toilet |Govt school | Pollachi
பொள்ளாச்சி அருகே ஆர். கோபாலபரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 2021ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியின் மொத்த பரப்பளவு 25 சென்ட். இரண்டு கட்டிடங்களில் 5 வகுப்பறைகள் உள்ளன. அதில் 20 குழந்தைகளுடன் கூடிய அங்கன் வாடி மையம். 119 பேர் படிக்கும் தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இரண்டு வகுப்பறைகளில் உயர் நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 175 மாணவர்கள் படிக்கின்றனர். இதிலேயே 8, 9 மற்றும் 10 ம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான இட வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் வராண்டாவில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகள் செயல்படுகின்றன. மழைக்காலங்களில் வகுப்பறை முன் உள்ள வராண்டாவில் தார்பாயை கட்டி மழையில் நனையாமல் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கென என நான்கு டாய்லெட்கள் உள்ளன. இட நெருக்கடியுடன் கட்டப்பட்டுள்ள டாய்டெட்டை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.