போட்டிகளில் வியக்க வைத்த மாணவ, மாணவிகள் | Tirupur | Short Games Students excelent
போட்டிகளில் வியக்க வைத்த மாணவ, மாணவிகள் / Tirupur / Short Games Students excelent திருப்பூர் வடக்கு குறுமைய போட்டியில், மாணவிகளுக்கான கபடி மற்றும் த்ரோபால் போட்டிகள், திருமுருகன்மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. மாணவியர், 14 வயது பிரிவில், ஸ்ரீசாய் பள்ளி முதலிடமும், கொங்கு பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 17 வயது பிரிவில் கொங்கு பள்ளி முதலிடமும், ஸ்ரீசாய் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் அரசுப்பள்ளி முதலிடமும், ஜெய் சாரதா பள்ளி இரண்டாமிடம் பெற்றனர். கபடி போட்டியில், 14 மற்றும், 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் அரசுப்பள்ளி முதலிடமும், வி.கே பள்ளி இரண்டாமிடம் பெற்றனர். 17 வயது பிரிவில், வி.கே பள்ளி முதலிடமும், அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் சுதா, பரிசு வழங்கினார். குறுமைய விளையாட்டு இணை செயலர் இளங்கோவன் ஒருங்கிணைத்தார். ----- கால்பந்தில் போட்டி மாணவர்கள் அபாரம் திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான கால்பந்து மற்றும் பால் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது. முதலிபாளையம் நிப்ட் டீ கல்லூரி மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியை கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 17 வயது மாணவர் பிரிவில், 12 பள்ளி அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில், கிட்ஸ் கிளப் பள்ளி அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிட்டில் பிளவர் பள்ளி அணியை வென்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில், சென்சுரியன் பள்ளி அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில், பாலபவன் குளோபல் பள்ளி அணியை வென்றது.