கபடி போட்டியில் அசத்திய வீரர்கள் | Sports | Covai
திருப்பூர் தெற்கு குறு மைய கபடி போட்டி முதலிபாளையம் நிப் டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 16 அணிகள், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 13 அணிகள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நான்கு அணிகள் பங்கேற்றன. முதலாவதாக முதலிபாளையம் அரசு பள்ளி அணி - பெரியாயிபாளையம் அரசு பள்ளி அணி மோதியது. அதில் முதலிபாளையம் அரசு பள்ளி 21:16 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விஜயாபுரம் அரசு பள்ளி அணி - வீரபாண்டி அரசு பள்ளி அணி மோதியது. அதில் விஜயாபுரம் அரசு பள்ளி அணி 41: 11 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது
ஆக 29, 2024